Home செய்திகள் உசிலம்பட்டியில் ஆணிச்செருப்பு அணிந்து நடந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

உசிலம்பட்டியில் ஆணிச்செருப்பு அணிந்து நடந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பல்வேறு கிராமத்தினர் இணைந்து கொண்டாடும் புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் மாசிப்பச்சை மகாசிவாராத்திரி திருவிழா மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.விழா முதல் நாளான சிவராத்திரியன்று ஆச்சி கிழவி ஆடைகள் அடங்கிய ஆபரணப்;பெட்டி உசிலம்பட்டி சின்னக்கருப்புச்சாமி கோவிலிருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தியபின் மூன்றாம் நாளான இன்று மீண்டும் உசிலம்பட்டி கருப்புக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.வரும் வழியில் உசிலம்பட்டியில் வத்தலக்குண்டு ரோட்டில் பூசாரிகள் இருவரும் ஆணிச்செருப்பின் மீது ஏறி நடந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்காக பூசாhரிகள் இருவரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வத்தலக்குண்டு ரோட்டிலுள்ள காவல்நிலையத்தின அருகிலிருந்து மதுரை ரோட்டிலுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் வரை சுமார் 500மீட்டர் துரரம் வரை ஆணிச்செருப்பின் மீது ஏறி நடந்து சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.; கிராமமக்கள் நோய்நொடின்றி வாழவும் மழை பெய்து கிராமம் செழிப்பதற்காகவும் மக்களுக்கு அம்மன் சக்தியைக் காட்டுவதற்காகவும் இது போன்று ஆணிச்செருப்பு அணிந்து நடந்து சென்று அருளாசி வழங்குவதாகவும் அவ்வாறு நடந்து வரும் போது அம்மன் சக்தியால் காலில் இரத்தமோ காயங்களோ ஏற்படுவதில்லை என பூசாரிகள் தொவித்தனர்.பின்னர் கோவில் பெட்டி கருப்புக் கோவிலை சென்றடைந்தது.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்ப்பாட்டை கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com