
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேடபட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பல லட்;சம் மதீப்பீட்டில் ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து குடிநீர் பைப் மூலம் வழங்க ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாதரை கிராமம் அருகில் செல்லும் கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் நெடுஞ்சாலையில் பீச்சி அடித்து வீணாகி சென்றது. அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்தபடியே மெதுவாக சென்றன. உடைப்பு ஏற்ப்பட்டு ஒரு மணி நேரமாகியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ பணியாளர்களோ உடைப்பு ஏற்ப்பட்ட இடத்திற்கு வராததால் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.