சோழவந்தான் அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த எம்எல்ஏவை சரமாரி கேள்வி கேட்ட தொண்டர்

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவிக்க வந்தனர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கீழே இறங்கிய மாணிக்கம் எம்எல்ஏ விடம் உள்ளூர் நிர்வாகிகளை அழைக்காமல் எப்படி மாலை போடலாம் என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதால் அங்கே ஒரே பரபரப்பாக காணப்பட்டது தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை புறக்கணிப்பதாக இப்பகுதி அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கூறுகின்றனர் மேலும் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதிகளில் சமீப காலமாக வெள்ளாளர் வேளாளர் கூட்டமைப்பு சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிர்ப்பு நிலை இருப்பதால் செய்வதறியாது தவித்து வருவதாக தொண்டர்கள் கூறுகின்றனர் வெள்ளாளர் வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் சமீபத்தில் சமரச முயற்சி செய்ததாகவும் அதில் பலனளிக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்