Home செய்திகள் பள்ளிக்கு வந்த பள்ளிக்குழந்தைகளை ரோஜாப்பூ இனிப்புகள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

பள்ளிக்கு வந்த பள்ளிக்குழந்தைகளை ரோஜாப்பூ இனிப்புகள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

by mohan

கொரோனா தொறறினால் கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில்; பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் உயர்நிலைப்பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன.இந்நிலையில் இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப்பள்ளிகளும் திறக்கப்பட்டன..அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ; சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் பள்ளிக்கு வந்த பள்ளிக்குழந்தைகளை பூ இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பள்ளித் தலைமைஆசிரியர் மதன்பிரபு ஏற்ப்பாட்டின் பேரில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் திமுக கலைஇலக்கியஅணி அமைப்பாளாருமான விஜய் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியருக்கு இனிப்புகள் கொடுக்க பள்ளி ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.மாஸ்க் அணியாத குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு மாஸ்க் கொடு;த்தனர். இச்செயல் நீண்ட நாட்களுக்குப்பின் பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது..

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com