
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இந்நிலையில் புதிதாகப் பிறந்த 2021ம் ஆண்டிலாது மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்ற நோக்கிலுல் கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபட்ட விழா உசிலம்பட்டி அருகே நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையாக அந்த கிராமத்தில் உள்ள நான்கு முக்கு சந்து தெருக்களில் வேப்பிலையை நட்டு வைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் வழிபாட்டை தொடர்ந்து நான்னு ஆட்டுகிடாகளை வெட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கினர். இதுபோன்று செய்தால் கிராமம் செழிக்கும், கிராமமக்கள் நோய்நொடிகள் தீரும் புதிய நோய் நொடிகள் கிராமமக்களை அண்டாது என்பது ஐதீகம் என கிராமமக்கள் தெரிவித்தனர். கடந்த வருடம் கிராமப் பகுதிகளில் எவ்வித விவசாயப்பணிpகளும் நடைபெறாத நிலையில் இவ்வாறு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டால் நல்லது நடைபெறுவது வழக்கம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.