Home செய்திகள் நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது…!

நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது…!

by Askar

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!