மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை…

மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண் மரணம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அப்பெண் மும்பையை  சேர்ந்தவர் லட்சுமிஅய்யர் 68. என்பது தெரியவந்துள்ளது.

இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருக்கவே கதவை தட்டியும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது மயங்கிய நிலையில் துதெரியவந்தது. இதை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது.லெட்சுமி ஐயர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லாட்ஜ் மேனேஜர் குருசாமி கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார் என தெரியவந்துள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் இவர் காணாமல் போனதாகவும் ஆகஸ்ட் 30 அன்று ஒரு பெண்மணி ட்விட்டரில் இவர்கள் புகைப்படத்தை போட்டு தகாப் காணவில்லை தேடி உள்ளார்கள். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்