Home செய்திகள் உசிலம்பட்டி பகுதியில் இரவில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்ப் பயிர்கள் சேதம். விவசாயிகள் கவலை

உசிலம்பட்டி பகுதியில் இரவில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்ப் பயிர்கள் சேதம். விவசாயிகள் கவலை

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று இரவு ( வியாழக்கிழமை ) மின்னல் இடியுடன் கூடிய பலத்த கன மழை பெய்தது. கிராம பகுதிகளில் 65.02 மிமீ அளவு கனமழை பெய்தது. இதனால் உசிலம்பட்டி பகுதிகளான பெரும்பாலான கண்மாய்கள், நீர்நிலைகளில் ஓரளவுக்கு நிரம்பியுள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி வாலாந்தூர், செல்லம்பட்டி, ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர்.

கடந்த 90 நாட்களுக்கு பிறகு நெற்பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சல் அடைந்து இன்னும் 15 நாட்களில் விவாசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணிகளை துவங்க உள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமைடந்துள்ளது. தற்போது கொரோனா முழு ஊரடங்கு என்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை நேரத்தில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலைசிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com