தமிழகம் முழுவதும் கொரோனா பேரிடர் மீட்பு மையம் தமுமுக உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளால் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான கொரோனா கால சேவைகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கொரோனா பேரிடர் மீட்பு மையம் தமுமுக அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது. இப்பேரிடர் மையத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்ஸிஜன் சேவை, ஆக்சிஜன் அளவு மற்றும் பல்ஸ் கண்டறிதல், கபசுர குடீநீர் வழங்குதல், முகக்கவசம், கொரோனா தடுப்பூசி முன்பதிவு, ஆம்புலன்ஸ், ஹோமியோபதி மாத்திரை, வைட்டமின் மாத்திரை, மனநல ஆலோசனை, மருத்துவமனை தகவல், அரசு காப்பீடு திட்டம், கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தல், மருத்துவர் ஆலோசனை ஆகியவை பேரிடர் மையத்தில் செயல்படுகிறது. இதன் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட ஊடகபிரிவு செயலாளர் வீராணம் முத்தலிபு தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஆஷிக் கிராஅத் ஓதினார். பொருளாளர் அப்பாஸ், துணைதலைவர். இஸ்மாயில், துணை செயலாளர்கள் சரிப், அணிஸ், முகம்மது அலி, ஊடகபிரிவு செயலாளர் ஹக்கீம், மாணவரணி செயலாளர் முஸ்தாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளை தலைவர் அமானுல்லா வரவேற்புரையாற்றினார். இப்பேரிடர் மையத்தை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் துவங்கி வைத்து தமுமுக வின் சேவைகளை பாராட்டி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாவதி மருத்துவ ஆலோசனை வழங்கினார். சுகாதார ஆய்வாளர் ராம்குமார் தமுமுக செயற்குழு உறுப்பினர் சுலைமான், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் முரளிராஜா, ஜமாத் தலைவர் காஜா மைதீன், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, தமுமுக ஜமீர், கனி, அமீன், சேட், ஹக்கீம், செய்யது அலி, சாதிக், முஸ்தபா, சாஜித், வாசித், கான், இப்ராஹிம், ஆஷிக், சாகுல், இம்ரான், ஜாபர், முஸ்தபா, ஹமீர், முத்துக்கனி, சதாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக துணைசெயலாளர் அப்பாஸ் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.