Home செய்திகள் திருவண்ணாமலை-கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை-கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

by mohan

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடமாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுபவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இதையடுத்து பவுணர்மியையொட்டி அண்ணாமலையார் கோவிலில் பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7-ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!