Home செய்திகள் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா, மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா, மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

by mohan

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர்,தலைவாசல் அருகே பெரியேரி கிராமத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா, மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்சி மையம் அமைய உள்ளது. அதன் துவக்க விழா இன்று பெரியேரியில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.விவசாய பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவற்றை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் பேசினார்.அப்போது அவர், தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களால், மாநிலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், கால்நடைகள் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவித்தார். அரசின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கோமாரி நோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை அளிக்கும் வகையில் கால்நடை தீவன ஆலை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.இங்கு அமையும் கால்நடை மருத்துவ உயர் கல்வி கல்லூரி வரும் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 1166 ஏக்கரில்1022 கோடியில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை மற்றும் விலங்கின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இக்கல்லூரியில் எம்விஎஸ்சி., எம்.டெக், பிஎச்டி போன்ற உயர்கல்வி உலகத் தரத்தில் வழங்கப்படும்.

மீனவர்கள், தொழில்முனை வோரை ஊக்குவிக்க, பால் பொருட் கள் உற்பத்தி, பதப்படுத்தல், இறைச்சி பதப்படுத்துதல் உள் ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும். கால்நடை மருத் துவக் கல்லுரியில் வரும் ஆண்டில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆராய்ச்சி பூங்கா மூலமாக சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஓராண்டுக்குள் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைக்கப்படும்.

செய்தி :இரமேஷ், நேரு நினைவு கல்லுரி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!