வணிக வரித்துறையில் 4 இணை ஆணையர், 43 துணை ஆணையர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..

வணிக வரித்துறையில் 4 இணை ஆணையர்கள், 43 துணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவு விவரம்: நெல்லை இணை ஆணையர் சுஷில் குமர்  இணை ஆணையர் ( சென்னை மத்திய கோட்டம்),  மதுரை இணை ஆணையர் சரஸ்வதி, சென்னை தெற்கு கோட்டம், சென்னை தெற்கு இணை ஆணையர் சவுந்திரராஜன் விற்பனை  வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய இணை ஆணையர், பத்மாவதி மதுரை சட்ட குழு இணை ஆணையர், சேலம் அமலாக்கப்பிரிவு இணை ஆணையர், விஸ்வநாதன்  மதுரை வணிக வரித்துறை இணை ஆணையராக பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

43 துணை ஆணையர்கள் மாற்றம்: சென்னை மண்டலம் 3 துணை ஆணையர் வீரசலிங்கம் கோவை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துணை ஆணையர், சென்னை மண்டலம் 4 சுதாகர் சென்னை வடக்கு நிர்வாகம்,  சென்னை மண்டல 9 துணை ஆணையர் சத்யா சென்னை தெற்கு அமலாக்கப்பிரிவு, மதுரை கிழக்கு துணை ஆணையர் இந்திரா சென்னை மத்திய மண்டல 9, திருச்சி அமலாக்கப்பிரிவு துணை ஆணையர் சுமி சென்னை மத்திய  அமலாக்கப்பிரிவு 1, கோவை அமலாக்கப்பிரிவு துணை ஆணையர் ராஜி சென்னை மண்டலம் 6 துணை ஆணையர், சென்னை தெற்கு  நிர்வாகம் துணை ஆணையர் குறிஞ்சி செல்வன் சென்னை மண்டலம் 9, கோவை நிர்வாகம்  துணை ஆணையர் வெண்ணிலா சென்னை தெற்கு மண்டலம் 10, கோவை மண்டலம் 3 துணை ஆணையர் அருணாச்சலம் சென்னை வணிகவரி (தணிக்கை) பிரிவுக்கு என மொத்தம் 43 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.