Home செய்திகள் அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு..

அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு..

by ஆசிரியர்

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை மறுகூட்டலின் போது வெற்றியடைய செய்ய ₹ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அண்ணாப் பல்கலைக்கழக ேபராசிரியர்கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.   தமிழகம் முழுவதும் 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3,02,380 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 மாணவர் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக கல்லூரியிலும் செமஸ்டர் தேர்வு 2017 மறுமதிப்பீடு பணி நடந்தது. இந்த கல்லூரியில் நடந்த மறுமதிப்பீட்டில் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.  பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் தேர்வில் வெற்றி பெற செய்ய ₹10,000 லஞ்சம் பெற்று கூடுதல் மதிப்பெண் வழங்கியது தெரியந்தது. பாதிக்கப்பட்ட மீனா என்பவர் உரிய ஆதாரங்களுடன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் விடைத்தாள் மறுகூட்டல் செய்த பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அளித்த வழிகாட்டுதல்கள்படியே விடைத்தாளை மதிப்பீடு செய்ததாக ஒத்துக்கொண்டனர். வழிகாட்டுதல்கள்படி விடைத்தாளை மதிப்பீடு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிவித்தனர். அண்ணா பல்கலைகழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக 2015-18ம் ஆண்டுகளில் பதவி வகித்த உமா, திண்டிவனம் பல்கலைகழக கல்லூரி உதவி பேராசிரியர் விஜயகுமார் (திண்டிவனம் மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளர்), திண்டிவனம் பல்கலைகழக கல்லூரி கணிதவியல் உதவிப் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு மாணவ,  மாணவர்களிடம் ₹10,000 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக  பேராசிரியர்கள் உமா,  விஜயகுமார், சிவக்குமார், சுந்தரராஜன், மகேஷ் பாபு, அன்புசெல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் ஐபிசி 120(பி), 167, 201, 420, 468, 471, ஊழல் தடுப்புபிரிவு 13(1)(டி), 13(2) ஆகிய 8 பிரிவுகளின் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களிடம் பணம் பெற்று முறைகேடான வகையில், மதிப்பெண் வழங்கிய 10 பேராசிரியர்களும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள 10 பேராசிரியர்கள் மீதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக பல்கலைகழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.  இதனிடையே, கோட்டூர்புரத்தில் உள்ள உமா, திண்டிவனத்தில் உள்ள பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோரின் வீடுகள், பல்கலை. வளாகத்தில் உள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!