குழந்தைகள் பாதுகாப்பு புத்தாக்க பயிற்சி..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அளவிலான கிராம கிளை மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரின் செயல்பாடுகள் குறித்து புத்தாக்கப்பயிற்சி நடந்தது.

ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில் திருப்புல்லாணி வீனஸ் மஹாலில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி தலைமை வகித்தார். பாக்யலட்சுமி வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு, குழு நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது காமாட்சி நன்றி வழங்கினார். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.