Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் சணல் பைகள் தயாரிப்பு அச்சிடுதல் பயிற்சி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் சணல் பைகள் தயாரிப்பு அச்சிடுதல் பயிற்சி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் மற்றும் அச்சிடுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் நிதி உதவியுடன் AOS Mission தொண்டு நிறுவனம் மகளிர் திட்ட சுய உதவிக் குழுவிற்கான இலவச ஜீட் பேக் தயாரிக்கும் பயிற்சியை 10.10.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஸ்ரீ ஆர். சங்கர் நாராயணன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சுய உதவி குழு பெண்களுக்கு சணல்பை தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் சுயஉதவி குழுவைச் சார்ந்த 90 பெண்களுக்கு 15 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. சணல் பைகள் தயாரிப்பு, அச்சிடுதல், சந்தைப்படுத்துதல் ஆகிய துறைகளில் சிறந்த தொழில் வல்லுநர்களால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் சிஸ்டர் நிவேதிதா மிஷன் டிரஸ்ட் மற்றும் நபார்டு இணைந்து நடத்திய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை 60 இளம் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) B.சசிக்குமார், உதவி மேலாளர் R.K.சுரேஷ் ராமலிங்கம், A.கணேசன் LDM இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (தென்காசி), எஸ்.தவசீலன் மேலாளர் (கனரா வங்கி), A.இளங்கோ FLC Lead bank, M.சிவ செல்வ பிரசன்னா பாரத ஸ்டேட் வங்கி (தென்காசி), எஸ்.சதிஸ்குமார் நிர்வாக இயக்குநர் (AOS Mission), மதன் சிஸ்டர் நிவேதிதா மிஷன் டிரஸ்ட், உதவி திட்ட அலுவலர் சிவகுமார் (மகளிர் திட்டம்), உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!