Home செய்திகள் தென்காசி குத்துக்கல் வலசையில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீடு..

தென்காசி குத்துக்கல் வலசையில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீடு..

by ஆசிரியர்

தென்காசி குத்துக்கல் வலசையில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெளியிடுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 28 தலைமையாசிரியர்களும் சேர்ந்து இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் இருமுறை அறிக்கைகள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மு.முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!