Home செய்திகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அவரச்சிகிச்சை வார்டின் அவல நிலை.. நோயாளிகள் அதிர்ச்சி…

உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அவரச்சிகிச்சை வார்டின் அவல நிலை.. நோயாளிகள் அதிர்ச்சி…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ளது உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணை.இங்கு உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கனோர் நோயாளிகளாவும் மற்றும் பார்வையாளர்களாவும் வந்து செல்கின்றனர்.மேலும் அவசரகால மகப்பேறு விபத்து அடிதடி போன்ற பிரச்சனைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் தினமும் நூற்றுக்கணக்கானோர் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் உள்ள மேற்கூரைப்பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது.இதனைக் கண்ட மருத்துவமணையிலிருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.அச்சமயத்தில் அப்பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தரமில்லாத பொருட்களால் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக நோயாளிகள் தெரிவித்தனர்.கடந்த மாதம் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ வார்டின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.உயிர் காக்கும் அரசு மருத்துவமணை தரமற்ற கட்டிடங்களால் உயிர்பலி வாங்கும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!