இராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பாக ரயில் மறியல்..

இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சி அறிவித்த மாநிலம் தழுவிய ரயில் மறியல் ஒட்டி இராமநாதபுரமர ரயில் நிலையத்தில் அக்கட்சி சார்பாக மறியல் போராட்டம் இன்று (02/07/2018)  நடைபெற்றது.
இப்போராட்டம்  இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை தலைமையில், தலித் மக்களுக்கு பாதுகாப்பான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்றிடவும்,  9-வது அட்டவணையில் சேர்த்திட கோரியும்,  தலித் பழங்குடியினர் மக்களின் சமூக நீதி காத்திட வேண்டும் என வலியுறுத்தி  நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், பெரியார் பேரவை, சமூக விடுதலை முன்னணி, பகுஜன் கட்சி, தமிழ் புலிகள்,ஆதித் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னனி என பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
R.முருகன்-மண்டபம்..

#Paid Promotion