தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடிய எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள்…

தேசிய சுற்றுலா தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சோழநாட்டுச் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தனர். ”ஜனவரி- 25 ஆம் நாளை நாம் தேசிய சுற்றுலா தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றோம். சுற்றுலா மூலம் பெறப்படும் அறிவுசார் கல்வி மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்” எனப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சுற்றுலாக் கல்வி குறித்தான முக்கியத்துவத்தை ஸ்பிக் நிறுவனத்தின் பொறியாளர்( ஒய்வு) திரு. கன்னையா அவர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்

தேசிய சுற்றுலா தினம் குறித்தும், சுற்றுலா குறித்தும் பள்ளி முதல்வர் ப.முத்துலெட்சுமி கூறும் பொழுது,”நமது நாட்டுப் பாரம்பரியங்கள் அற்புதமானவை. அவை காலத்தால் மீட்டெடுக்கப்பட வேண்டும். மன்னர்கள் காலக் கலைத்திறன்கள், கட்டிடங்கள் போன்றவை இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முக்கியமானதாகிறது. இதனால் அவரவர்களின் பூர்வீகப் பெருமைகளைத் தெரிந்து கொள்கின்றனர்” என்றார். தஞ்சை பெரியகோயில், சரஸ்வதி நூலகம், தஞ்சை அரண்மனை, சிவகங்கைப் பூங்கா, கல்லணை, எனப் பல்வேறு இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா சென்று வந்தனர். மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள் இவ்விடங்கள் குறித்தான வரலாற்றுச் செய்திகளை எடுத்துக்கூறினர்.