Home செய்திகள்உலக செய்திகள் புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 1997).

புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 1997).

by mohan

கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaugh) பிப்ரவரி 4, 1906ல் அமேரிக்கா, இல்லினாய்ஸில் பிறந்தார். 1922 ஆம் ஆண்டில் அவரது குடும்பம் கன்சாஸின் புர்டெட்டுக்குச் சென்ற பிறகு, ஆலங்கட்டி மழை அவரது குடும்பத்தின் பண்ணை பயிர்களை நாசமாக்கியபோது கல்லூரியில் சேருவதற்கான டோம்பாக் திட்டங்கள் விரக்தியடைந்தன. 1926ல் தொடங்கி, லென்ஸ்கள் மற்றும் கண்ணாடியுடன் பல தொலைநோக்கிகளை அவர் தானே கட்டினார். அவரது தொலைநோக்கி கண்ணாடியை சிறப்பாக சோதிக்க, டோம்பாக், ஒரு தேர்வு மற்றும் திண்ணை கொண்டு, 24 அடி நீளமும், 8 அடி ஆழமும், 7 அடி அகலமும் கொண்ட ஒரு குழி தோண்டினார். இது ஒரு நிலையான காற்று வெப்பநிலையை வழங்கியது. காற்று நீரோட்டங்கள் இல்லாதது, மேலும் குடும்பத்தால் ரூட் பாதாள மற்றும் அவசரகால தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அவர் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் வரைபடங்களை அரிசோனாவின் ஃபிளாக்ஸ்டாப்பில் உள்ள லோவெல் ஆய்வகத்திற்கு அனுப்பினார். இது அவருக்கு வேலை வழங்கியது. டோம்பாக் 1929 முதல் 1945 வரை அங்கு பணியாற்றினார்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது. இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த புளூட்டோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார். சூரிய மண்டலத்தில் கடைசிக் கோளாக இருந்த புளூட்டோ 10 ஆண்டுகளுக்கு முன்பு புளுட்டோ ஒரு கோள் அல்ல என்று தகுதி இறக்கம் செய்யப்பட்டது. நாம் வாழும் இந்த பூமியையும் சேர்த்து பல்வேறு கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வரிசையில் சூரியனுக்குப் பக்கத்தில் சுற்றி வரும் முதல் கோள் புதன். 3-வதாக நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இதேபோல 8-வது கோளாக சுற்றி வரும் நெப்டியூனுக்கு அடுத்ததாக புதிய கோள் ஒன்று 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் அறிஞரான கிளைட் டோம்பா இதைக் கண்டுபிடித்தார்.

இது குறித்த தகவல் வெளியானதும், புதிய கோளுக்கு பலரும் பெயர் சூட்ட முன்வந்தார்கள். இங்கிலாந்தை சேர்ந்த வெனிடியா என்ற 11 வயது சிறுமி, கிரேக்க பாதாள உலக கடவுளின் ரோமானிய பெயரான ‘புளூட்டோ’என்ற பெயரை தனது தாத்தா மூலமாக பரிந்துரை செய்தாள். அப்படித்தான் 9-வது கோளுக்கு ‘புளூட்டோ’என்ற பெயர் வந்தது. சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்த புளூட்டோ பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உள்ளன. சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. அப்பால் புளூட்டோ உள்ளது. அந்தக் கோள் முழுவதும் பாறை மற்றும் பனிக்கட்டியாகத்தான் உள்ளது. புளூட்டோவின் சராசரி வெப்பநிலை -230 டிகிரி செல்சியஸ். பூமியைவிட அங்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால், எடையும் குறைவாகவே இருக்கும். அதாவது பூமியில் உங்களது எடை 30 கிலோ என்றால், புளூட்டோவில் 2 கிலோ மட்டுமே இருக்கும். புளூட்டோ ஒருமுறை சூரியனை சுற்றிவர 248 வருடங்கள் ஆகும். புளூட்டோ பற்றிய சுவாரசியங்களை போலவே, அது தொடர்பான ஆராய்ச்சியில் சர்ச்சைகளும் அதிகம் இருந்தன. சில விஞ்ஞானிகள் புளூட்டோ கோள் இல்லை என்று சொன்னார்கள். சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற கோள்களை போல இல்லாமல், புளுட்டோவின் சுற்றுவட்டப்பாதை சில சமயம் சூரியனிலிருந்து ரொம்ப தொலைவாகவும், சில சமயம் பக்கத்திலுமாக அமைந்திருந்தது.

நெப்டியூனின் சுற்று வட்டப்பாதையில் புளுட்டோவின் பாதை குறுக்கிடுவதையும் கண்டுபிடித்தார்கள். இதன் காரணமாக பூமியின் நிலவான சந்திரனைவிட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று கூடிய வானியல் அறிஞர்கள், சூரிய மண்டலத்தின் 9-வது கோளாக இருந்த புளூட்டோவை ‘குறுங்கோள்’ அல்லது ’குள்ளக்கோள்’(Dwarf Planet) என்று சொல்லி தகுதி இறக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து புளூட்டோவையும் சேர்த்து சூரிய மண்டலத்தில் உள்ள பிற குள்ள கோள்கள் ‘புளூட்டோய்ட்ஸ்’ என்ற அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆராயப்பட்டுவருகின்றன. புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா ஜனவரி 16, 1997ல் தனது 90வது அகவையில் நியூ மெக்ஸிகோவின் லாஸ் க்ரூஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது அஸ்தியின் ஒரு சிறிய பகுதி நியூ ஹொரைஸன்ஸ் விண்கலத்தில் வைக்கப்பட்டது. கொள்கலனில் கல்வெட்டு உள்ளது. Source By: Wikipedia and Hindutamil. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!