ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கண்டித்து பரமக்குடியில் அதிமுக., ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பெண்களை தரம் தாழ்த்தி பேசிய தாக திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து பரமக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வருவாய், பேரிடர் மேலாண் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் அ.அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி மாநில இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ் ஆகியோர் பேசினர். இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது. பாலசிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.ஆனிமுத்து, தொழிலதிபர் ஆர்.ஜி.ரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.தர்மர், எஸ்.பி.காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.சரவணக்குமார், நகர் செயலாளர்கள் எம்..அங்குச்சாமி, கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர், கே.கே. அர்ச்சுணன், மண்டபம் டாக்டர் இளையராஜா குளோபல் அகாடமி இயக்குநர் டாக்டர் கே. இளையராஜா, டாக்டர் இளையராஜா குளோபல் அகாடமி நிர்வாக அதிகாரி டி.மணிகண்ட ராஜா, விரிவுரையாளர் ஷைலஜா ஆனந்தி, டாஸ்மாக் விற்பனையாளர் எம்.பூபதி குமார், பாம்பன் ஊராட்சி அதிமுக., முன்னாள் செயலாளர் முஷாபர் அஹமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.