Home செய்திகள்மாநில செய்திகள் கிடு கிடுவென உயரும் தங்கம்!- அதிர்ச்சியில் கிடுகிடுத்து கிடக்கும் சாமானியர்கள்..

கிடு கிடுவென உயரும் தங்கம்!- அதிர்ச்சியில் கிடுகிடுத்து கிடக்கும் சாமானியர்கள்..

by Askar

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.

மறுநாள் செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்தது. இதேபோல், நேற்று புதன்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ஒரு சவரன் ரூ. 48,880-க்கும், கிராமுக்கு ரூ. 39 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ₹6,135-க்கும் சவரன் ₹49,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com