இராமநாதபுரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை மாதிரி தேர்வு : 120 பேர் பங்கேற்பு..

இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன் பிஎஸ்சி குரூப்-2 முதன்மை நேர்காணல் தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று(16/02/19) நடைபெற்றது. இராமநாதபுரத்தில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி, கடந்த 3 ஆண்டுகளாக கல்வி சேவை செய்து வருகிறது. அரசுப் பணியில் சேர ஏராளமானோருக்கு உதவி வருகிறது . இங்கு பயிற்சி பெற்ற பலர் அரசு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். 2018 இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சியடைந்த 113 பேர் அரசு பணியில் உள்ளனர். அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோருக்கு பல மாதிரி தேர்வுகளை தேர்வை வெல்வது எளிது என தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி, ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு நேர்காணலுக்கான மாதிரி தேர்வு இன்று( 16/02/2019 ) நடந்தது. போட்டி தேர்வை எதிர்கொள்வோருக்கு இந்த மாதிரி தேர்வு பயனுள்ளதாக அமையும் என்பதால் 55 ஆண், 65 பெண் விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். மாதிரி தேர்வில் கலந்து கொண்டோருக்கு சுரேஷ் அகாடமி சார்பில் பாட குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் பற்றிய விரிவான விளக்கங்கள்,  விடைகளுடன் கூடிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல், ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜேஷ் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ராமச்சந்திரன்மாவட்ட கருவூல அதிகாரி பி.கனி முருகன் ஆகியோர் போட்டி தேர்வை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை வழங்கினர்.