தமுமுக 25ம் ஆண்டு நிறைவு… இராமநாதபுரம், மண்டபம், ஏர்வாடி சுற்றுவட்டாரத்தில் நல பணிகள்… உதவிகள்…

இராமநாதபுரம் மண்டபம்  ஏர்வாடி பகுதிகளில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீல் புத்தாடை உணவு பொருள்கள் உதவி 11-09-2020 அன்று  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  உருவாக்கப்பட்டு இருபத்தி ஐந்து ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக ரத்ததானம், சிறுதொழில் உதவி, கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இராமநாதபுரத்தில் இன்று 11.09.2020 மாவட்டத்தின் பல ஊர்களைச் சேர்ந்த ஏழைக்குடும்பங்களின் 20 சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்து வைக்கப்பட்டது.
10 லட்சம் மதிப்பு புத்தாடை, உணவு பொருள்கள் உதவி :-
ஒரு குடும்பத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் புத்தாடைகள் உணவு பொருட்கள் ஏர்வாடியில் 300 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது அதைத்தொடர்ந்து மண்டபத்தில் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பில் புத்தாடைகள் உணவுப் பொருட்கள் 200 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது மொத்தம் 500 குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கொடுக்கப்பட்டது
தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில்
M.பட்டானி மீரான் (ஆனந்தூர்)
தமுமுக-மமக மாவட்ட தலைவர்
N.ஜிஃப்ரி (வழக்கறிஞர்-தொண்டி)
தமுமுக மாவட்ட செயலாளர்
S.முஜிபுர் ரஹ்மான் (கீழக்கரை)
மமக மாவட்ட செயலாளர்
M.பரக்கத்துல்லாஹ் (பனைக்குளம்)
மாவட்ட பொருளாளர்
தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் A.அப்துல்(ஷாகுல்) ஹமீது மேலபுதுக்குடி Mரைஸ் இபுராஹிம் தங்கச்சிமடம் ஆசிக்’, தேவிபட்டினம் சுல்தான் மாவட்ட  அணி நிர்வாகிகள் iip மாவட்ட செயலாளர் தாஹிர் ஆலிம் மாணவர் அணி இர்பான் தொண்டர் அணி பகுருல் ஹசன் இளைஞர் அணி சபிக் இளைஞர் அணி துணை செயலாளர் சீனி அன்வர் அலி மருத்துவ அணி யாசர் வர்தக அணி அஹமது ஹசன் விளையாட்டு அணி ஆனந்தூர் உமர்  சுற்று சூழல் அணி பயாஸ் ஆகியோர் ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டது
செய்தி/ தகவல்
தமுமுக மனித நேய மக்கள் கட்சி
இராமநாதபுரம் மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..