செங்கம் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கல;ஒருவர் கைது.!

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆண்டிபட்டி பகுதியில் ஹான்ஸ், பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகளை, மேல்வணக்கம்பாடி சேர்ந்த வெங்கடேசன் என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.தடை செய்யப்பட்ட போதைப்பொருள்பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள்அதனைத் தொடர்ந்து, அவர் பதுக்கி வைத்திருந்த 222 போதைப் பொருள்கள் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

உதவிக்கரம் நீட்டுங்கள்..