
சிரியா நாட்டில் அந்நாட்டு அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் கடும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஐ.நா சபை போர் நிறுத்த வலியுறுத்த கோரியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அப்போரில் ஆளும் அரசுக்கு ரஷ்யா அனைத்து விதமான போர் உதவிகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா நாட்டின் போக்கை கண்டித்து இன்று (28-02-2018) சென்னையில் உள்ள துணை ரஷ்யா தூதரக முற்றுகை போராட்டம் தமுமுக சார்பாக நடத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மேலும் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் மற்றும் இன்னும் பிற நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.