தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் இதில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள பெண்களுக்கு ₹.400/- மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ₹.300/- கட்டணமாக வசூலிக்கப்படும்.