Home செய்திகள் பனைக்குளம் த.மு.மு.க தலைவர் மகனுக்கு அரிவாள் வெட்டு. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி…

பனைக்குளம் த.மு.மு.க தலைவர் மகனுக்கு அரிவாள் வெட்டு. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம்  பனைக்குளம் த.மு.மு.க கிளை தலைவர் செய்யது முஹமது. சமூக சேவகரான இவர் பனைக்குளத்தில் டீ கடை நடத்துகிறார். இவரது மூத்த மகன் நிஹால் அஹமது (21). பொறியியல் பட்டதாரி. உயர் கல்விக்காக விண்ணப்பித்துள்ளார். இவர் த.மு.மு.க பனைக்குளம் கிளை மாணவரணி உறுப்பினராக உள்ளார். த.மு.மு.க., ரத்ததான முகாம்களிலும் உயிர் காக்கும் அவசர நேரங்களிலும் ரத்தான கொடையளித்து நிறைய பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். உயர் கல்விக்காக இன்னும் சில தினங்களில் வெளியூர் உள்ள நிலையில் இவரிடம் அவரது நண்பர்கள் தேநீர் விருந்து கேட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து ஒரு காரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வழுதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்று இரவு 10 மணியளவில் தனது மாணவ நண்பர்களுடன் டீ அருந்தி கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் மது அருந்திய நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் டூ வீலர் களில் டீக்கடை வந்தனர். அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த மாணவர் நிஹால் மற்றும் அவரது நண்பர்களை வாய்க்கு ஒவ்வாத வார்த்தைகளில் பேசி் இரும்பு கம்பியால் தாக்கி அரிவாளால் தலையில் வெட்டினர். பின்னர் அவர்களை ஓட ஓட விரட்டினர். சினிமாவை விஞ்சும் வண்ணம் காட்சியளித்த இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இத் தாக்குதலில் படு காயமடைந்த நிஹால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தாக்குதலை தடுக்க முடியாத உடன் இருந்த மாணவர்களும் உயிர் பிழைக்க தப்பி ஓட்டம் பிடித்தனர்.

மேலும் நிஹால் வந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ 20,000 மதிப்புள்ள செல்போன், மயங்கி கிடந்த நிஹால் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ 10,000 ரொக்கத்தை கும்பல் அபகரித்து தப்பியது. மின்னல் வேகத்தில் நடந்த இச்செயலை பார்த்த பேக்கரி ஊழியர்களும் கடையை அப்படியே போட்டு விட்டு தப்பினனர். அக்கும்பல் அங்கிருந்து நகர்ந்ததை நிஹாலின் நண்பர்கள் மயங்கி கிடந்த நிஹாலை காரில் தூக் ஏற்றிக்கொண்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை விரைந்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இத்தகவல் அறிந்த த.மு.மு.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஆஸ்பத்திரி முன்பாக திரண்டனர்.போராட்டம் வெடிக்கும் சூழலும் பதட்டமும் உருவானது.  தாக்குதல் நடத்திய கும்பல் வாலாந்தரவை பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் போதை கும்பலாக இருக்கலாம் என தெரிகிறது. அடிக்கடி இது போன்ற கொலை வெறி தாக்குதல்கள் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கும்பல் அடிக்கடி நட த்துகின்றனர்.

இது போன்ற கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பனைக்குளம் த.மு.மு.க கிளை செயலாளரும் முன்னால் மாவட்ட த.மு.மு.க – ம.ம.க பொருளாளருமான பனைக்குளம் பரக்கத்துல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com