கேரளாவில் வெள்ள பாதிப்பின் போது, தனது முதுகை படிக்கெட்டாக்கி, பெண் ஒருவர் படகில் ஏற உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வென்கரா பகுதி வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்த வீடுகளில் தங்கி இருந்த மக்களை ராணுவ வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக, 300 மீனவர்களும் களம் இறங்கினர். ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பெண்ணை மீட்க மீனவர்களின் உதவி நாடப்பட்டது. அவர்களுக்கு ரப்பர் படகை தேசிய மீட்பு படையினர் அளித்தனர்.
மீட்பு படகில் சென்ற கே.பி.ஜெய்ஸ்வால் என்ற மீனவர், அந்த பெண் ரத்த போக்கினால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் , அவரால் தானாக படகில் ஏற முடியாது என்பதையும் உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் நீருக்குள் முட்டி போட்டு தனது முதுகையே படிக்கெட்டாக மாற்றினார். அவர் மீது ஏறி, அப் பெண் படகில் அமர்ந்து கொண்டார். இந்த படம் சமூக வலை தளங்களில் அதிகமாக பரவி, அந்த மீனவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இச்சூழ்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் கோழிக்கோடு டீலர் எராம் மோட்டார்ஸ் மீனவர் ஜெய்வாலுக்கு புத்தம் புதிய மகிந்திரா மாரசோ காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்
You must be logged in to post a comment.