Home செய்திகள் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி நியமனம்…

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகி நியமனம்…

by ஆசிரியர்

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே  க்ரீன் பீச் ரிசார்டில் மாநில செயலாளர் வழக்கறிஞர் நூருதீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளர் கோவை அம்ஜத் குர்ஆன் வசனம் ஓதி துவக்கி வைக்க, மாநில பொருளாளர் தமிம் அன்சாரி வரவேற்றபுரையாற்றினார். இந்நிகழ்வை மாநில துணை செயலாளர்கள் சுல்பிக்கார் மற்றும் காயல் இர்சாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இக்கூட்டத்தில் தமுமுக-மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் , தமுமுக பொதுச்செயலாளர் பேரா. ஹாஜாகனி, மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், தமுமுக மாநில செயலாளர்கள் சலிமுல்லாஹ் கான் மற்றும் ஹூசைன்கனி, மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அனைத்து மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்க நிர்வாகிகள், இராமாநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக மாநில துணை செயலாளர் குர்ஷித் உசேன் நன்றியுரையாற்றினர்.

இக்கூட்டத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், நீட் தோ்வு நிரத்தரமாக ரத்து செய்ய வேண்டும், OBC மருத்துவ மாணவா்களுக்கான 50% இடஒதுக்கீடு வழக்கில் ஆட்சேபம் தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்எஉ 7.5% உள்ஒதுக்கீடு அரசானை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், உயர்தர  அந்தஸ்து என்ற பெயரில் அண்ணா பல்கலைகழகத்தை பிாித்து மத்திய அரசுக்கு தாரைவாக்க முயலும் துணை வேந்தர் சூரப்பாவை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – தமிழக அரசு உடனே தலையிட்டு இம்முயற்சியை தடுக்க வலியுறுத்தியும், உபி மணிஷா – திண்டுக்கல் கலைவானி என தொடரும் பாலியல் வன்முறை சம்பவங்களில் உடனடியாக குற்றிவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 82 வயதான கோவை பாஷா பாய் உள்ளிட்ட 20 ஆண்டுகளுக்கு மேலான அனைத்து சிறைவாசிகளையும் – 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியறுத்தியும், விசிக தலைவர் திருமாவளவன்  கூறிய மனுநீதி விவகாரத்தை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேட முயலும் பாஜகவிற்கு கண்டனம் தொிவித்தும் – அவருக்கு சமூகநீதி மாணவர் இயக்கம் தோளோடு தோள் நின்று களமாடும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே போல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணியான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயற்குழு மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் தலலைமையில்  நவம்பர் 1 ஆம் தேதி மண்டபம் SSK Green Beach Resort நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக-மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி, மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், தமுமுக மாநில பொதுசெயலாளர் சலிமுல்லாஹ் கான் மற்றும் ஹூஸைன் கனி, மற்றும் மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன்,மாணவர் அணி பொருளாளர் தமிம் அன்சாரி மாணவர் அணி மாநில துணை செயலாளர்கள் சுல்பிக்கர், இர்ஷாத், அம்ஜத், குர்ஷீத் அகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த கீழக்கரை சார்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகன் முஹம்மது நஃபில்  மண்டலச் செயலாளராக பதிவி நியமிக்கப்பட்டார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!