Home செய்திகள்மாநில செய்திகள் திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்..

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்..

by Askar

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்..

திருச்சியில் இன்று (பிப்.12) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களை காக்க ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறுபான்மை சமூக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்தும் அறிவிப்பையும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பையும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவித்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைநகர் சென்னையில், முறையான ஏற்பாடுகள் இன்றி, அவசரகதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளார்கள். மக்களின் பயணத்தை எளிமைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை அவதிக்கும், அலைக்கழிப்புக்கும் உள்ளாக்கும் வகையில், மிகமோசமான திட்டமிடலுடன் அதனை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் செயல்படுத்தி வருகின்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் மக்களின் பயணநேரமும், செலவும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் கட்டாய நடவடிக்கைகள் என்பது கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டே செல்லும் அதே வேளையில், மக்கள் பயணத்திற்கான வசதியை வெகுதொலைவில் கொண்டு செல்வது ஏற்புடையதல்ல. ஆகவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதோடு, சென்னையில் உள்ள அனைத்து வெளியூர் பேருந்து நிலையங்களிலிருந்தும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் பேருந்து வசதிகளை செய்துகொடுக்க திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது அரசு குறிப்பிடும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!