திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு..
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரியின் பிரார்த்தனை கூடத்தில் கொடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். முதல்வர் முனைவர். தி. வெங்கடேசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதிராஜா, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், ரகு, முனைவர் ராஜ்குமார், மற்றும் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.