Home செய்திகள் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவில் தெப்பத் திருவிழா..

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவில் தெப்பத் திருவிழா..

by Askar

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவில் தெப்பத் திருவிழா..

மதுரை மாவட்டம் திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோவில் மிகவும் சிறப்பு பெற்றகோவில்.இங்கு 31ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமியும் அம்பாளும் கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்திருவிழா மண்டகப்படிக்கு வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி அம்பாளுக்கு 21 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.உலக நன்மைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு வெள்ளி சப்பரத்தில் மின்னொளி அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் தெப்பத்தை சுற்றி வலம் வந்தனர். காளியம்மன்கோவில்,சித்திவினாயகர் கோவில் உட்பட வழிநெடுகஅபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி அம்மன் கோவிலை வந்து அடைந்தனர்.பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார்,செயல்அலுவலர் சரவணன்,விழாக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவேடகம் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள்ஆறுமுகம், கவுன்சிலர் லிங்கராணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!