Home செய்திகள் திருவண்ணாமலை, செங்கம்  பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்  பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு  இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது . 

திருவண்ணாமலை, செங்கம்  பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்  பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு  இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது . 

by Askar

திருவண்ணாமலை, செங்கம்  பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்  பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு  இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது . 

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலின்படி மாவட்ட கல்வி அலுவலர்   காளிதாஸ் ஆலோசனையன் படியும் இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது.

முகாமினை எஸ் கே வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மணி முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது செங்கம் சாரண மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம் தண்டராம்பட்டு புதுப்பாளையம் ஒன்றியங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த100 சாரண  மாணவர்கள்  70 சாரணிய மாணவிகளும்  முகாமில் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், மாநில ஆளுனரின் உயரிய விருதான, ராஜ்யபுரஸ்கார் விருது மாநில தேர்வு  தேர்வாணையர்கள் சாரணப் பிரிவில் செய்யாறு லோகநாதன், சாரணிய பிரிவில் விருதாச்சலம் விஜயா ஆகியோர் தேர்வை சிறப்பாக நடத்தினர். செங்கம் மாவட்ட செயலாளர் ம.வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு ஆணையர்  சாரணர் செந்தமிழ் செல்வன் சாரணிய அமைப்பு ஆணையர், மகாலட்சுமி, பயிற்சி ஆணையர் பாலகுமார் .கொண்ட குழுவினர்,  மாவட்டத்தில், பல்வேறு பள்ளிகளிலிருந்து, முகாமில் பங்கேற்ற,  சாரண மாணவர்கள், சாரணிய மாணவியர்கள் விருதுக்கு தேர்வு செய்தனர். மேலும்செங்கம் சாரண மாவட்டம் தமிழகத்திலேயே அரசு பள்ளிகளில் அதிக

எண்ணிக்கையில் சாரண சாரணிய படை பதிவு செய்து சாதனை புரிந்தமைக்கு  விருது வழங்கப்பட்டதை அடுத்து பாராட்டு விழா நடைபெற்றது பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், தலைவர் அறிவழகன், பள்ளிமுதல்வர் மணி, இயக்குனர் அருண், வட்டார கல்வி அலுவலர்கள் உதயகுமார், ஆறுமுகம்,  ஆசிரியர் கார்த்திக், இலட்சுமி காந்தன்,மாவட்ட சாரண ஆணையர் சேகர், சாரணிய ஆணையர் அன்னாள் கிருபை, மாவட்ட ஆணையர் (மூத்தோர் வளம்) அன்பழகன் மற்றும் பாரத சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com