திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர்மங்கலம் பச்சையம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் உடனாகிய மன்னார் சுவாமி திருக்கோயில் ஜீரனோர்த்தரான நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பரிவார தேவதைகளுக்கும் ஸ்ரீ பச்சையம்மன் மன்னார் சுவாமி, வீரபத்ரன், சப்த கன்னிகள் மற்றும் கருப்பசாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, அங்குரார்ப்பணம், யாக பூஜை, தீபாராதனை, மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன. அதனைதொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன்பிறகு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட புனித நீர் விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மூலஸ்தானத்தில் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் செங்கம், புதுப்பாளையம், கடலாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார் சாமி கோயில் அறங்காவலர் பி.ஜே.வடிவேலன் மற்றும் முன்னூர்மங்கலம் கிராம ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மாவட்ட அமைப்பாளர் இளங்கோ, புதூர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி செங்கம் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
You must be logged in to post a comment.