Home செய்திகள் தண்டராம்பட்டு அருகே 7 அணைக்கட்டுகளளை; உலக வங்கி நிதி ரூபாய் எட்டு கோடியில் புனரமைப்பு பணிகள்!

தண்டராம்பட்டு அருகே 7 அணைக்கட்டுகளளை; உலக வங்கி நிதி ரூபாய் எட்டு கோடியில் புனரமைப்பு பணிகள்!

by Askar

தண்டராம்பட்டு அருகே 7 அணைக்கட்டுகளளை; உலக வங்கி நிதி ரூபாய் எட்டு கோடியில் புனரமைப்பு பணிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே 7 அணைக்கட்டுகள் உலக வங்கி நிதி ரூபாய் எட்டு கோடியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கியுள்ளது.

திருவண்ணாமலை ஆழியாறு 30 அடி நிலத்தில் உப வடி ஒரு ஏரி மற்றும் 7 அணைக்கட்டுகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க உலக வங்கி ரூபாய் 7.98 கோடி நிதி ஒதுக்கியுள்ளது இதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் பெண்ணையாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட பொறியாளர் மகேந்திரன் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உதவி சக்திவேல் ஒப்பந்ததாரர் வேலுச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர் இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஆழியாறு மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி மற்றும் அதன் வரத்து கால்வாய் மற்றும் 7 அணைக்கட்டுகள் மற்றும் அதன் வரத்து கால்வாய்களை புனரமைக்க உலக வங்கி ரூபாய் 7.98 கோடி நிதி ஒதுக்கியுள்ளது அதன்படி இப்பகுதியிலுள்ள குப்பதாங்கல், அகரம்பள்ளிபட்டு, கீழ்வணக்கம்பாடி, நம்மியந்தல், பண்டாரபாளையம் அணைக்கட்டுகள், தென்முடியனூர், பழைய மற்றும் புதிய அணைக்கட்டு மற்றும் அகரம்பள்ளிபட்டு ஏரியை ஆகியன சீரமைக்கப்படும். திட்டத்தின் கீழ் அணைக்கட்டு மற்றும் பாசன கால்வாய்கள் தரை மதகுகளை புனரமைத்தல் ஆகிய பணிகளும் ஏரிக் கரையை பலப்படுத்துதல், மதகுகளை திரும்ப கட்டுதல், ஆகிய பணிகள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் 785 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே செய்து முடிக்க வேண்டும் என மண்டல தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!