உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் தேவர் போல் வேடம் அணிந்து ஊர்வலம் வந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதன் முறையாக சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தேசியத்தலைவர் பசும்பொன் தேவர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.பின்னர் தேவராட்டம் சிலம்பாட்டம் கும்மி நடனம் மற்றும் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த விழாக்களில் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சி பள்ளி தாளாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதப்பிரியா பரிசுகள் வழங்கினார.; பள்ளி தாளானர் வேல்முருகன் கூறுகையில் சுதந்திரத்திற்காக போராடிய தேசியத்தலைவர் முத்துராமலிங்கத்தேவர் என்பதால் காந்தி ஜெயந்தி பள்ளிகளில் கொண்டாடப்படுவதைப் போன்று தேவர் ஜெயந்தியை முதன் முறையாக கொண்டாடியதாகவும் இனி வருடம் தோறும் தமது பள்ளியில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.