56
இராமநாதபுரம், அக்.30- இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (அக்.30) மலர் மாலை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் வருவாய், பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன், நிதி, மனிதவள மேலாண் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், நவாஸ் கனி எம்பி, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
You must be logged in to post a comment.