தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி கொலை செய்கின்ற சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயல்களை கண்டிக்கும் வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம்.கள்ளிபட்டி .பெண்கள் – சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் படுகொலைகளுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மகளிர் விடுதலை இயக்கத்தின் வாசலிருப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோமதி ஆனந்தராஜ் மாநில துணை செயலர் (மகளிர் விடுதலை இயக்கம்) தலைமையில் முன்னிலை ப.நாகரத்தினம் மாவட்ட செயலாளர் இரா.சேகுவேரா பிரபாகரன் விடுதலை செல்வா நவரசன் மணி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.