தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி.
தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணிகள் நடந்தது. சாலையில் பயணிப்பவர்கள் பூங்காவில் அமர்ந்து உணவருந்துதல், இளைப்பாறுதல், இயற்கை சூழல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் அதிகமாக வந்து தங்கி இந்த மரங்களில் உள்ள பழங்களை உட்கொள்ள ஏதுவாக நாவல் மரம், பட்டர் ரோஸ், இந்தியன் செர்ரி, போன்ற மரக்கன்றுகளும் இத்துடன் நடப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கும் பணியில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன், பொதுச் செயலாளர் ஜமீன் ஆகியோருடன் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.