Home செய்திகள் இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..

by Askar

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா இராயப்பன்பட்டியில் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா சிறப்பாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.அவர் பேசும் போது, இந்த முக்கியமான ஒரு வரலாற்று மைல்கல் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாக இரண்டு காரணங்கள் முதல் சுமார் ஏழு எட்டு தலைமுறையாக ராயப்பன்பட்டியில் விவசாயம் செய்து கொண்டிருக்கிற குடும்பத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையிலும் நானே இன்றைக்கும் ராயப்பன்பட்டியில் விவசாய நிலம் வைத்து உழவு பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவது நீதி கட்சியின் நான்காவது வாரிசாக என் கொள்ளு தாத்தா சுப்ரமணிய முதலியார் துவக்கத்தில் நிதியை அளித்து உப தலைவராக பயணித்து பல மாற்றங்களை உருவாக்கி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்குப் பிறகு என் தாத்தா பிடி ராஜன் அதற்குப் பிறகு என் அப்பா பண்பாளர் பழனிவேல் ராஜன் ஆகியோர் இந்த இயக்கத்தோடு அடிப்படை தொண்டர்களுக்கு பணி செய்கிறவர்கள் என்ற அடிப்படையில் கல்வியோடு முக்கியத்துவத்தை நன்கு அறிந்து மீண்டும் மீண்டும் செயலிலும் கொள்கைகளும் வலியுறுத்தி செயல்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த விழாவுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

எந்த ஒரு சமுதாயத்திற்கும் முன்னேற்றத்திற்கு சிறந்த பாதை ஒரே சிறந்த பாதை அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது அனைவருக்கும். சிலருக்கு கல்வி அளித்தால் பத்தாது இன்றைக்கு கூட வளர்ந்த மாநிலங்களில் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டை போல எந்த மாநிலமும் இந்தியாவில் இல்லவே இல்லை ஒரே காரணம் சம உரிமை சம வாய்ப்பு எல்லா சமுதாயங்களுக்கும் வாய்ப்பு பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சியோட முயற்சியினால் ஆரம்பித்த பணி இன்றைக்கு கூட இங்கு பார்த்தால் கிட்டத்தட்ட சமமாக எண்ணிக்கை இருக்கிறார்கள் பெண்கள் இதுதான் ஒரு சமுதாயத்துக்கு அழகு.

ஒரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு அடிப்படை இந்த பணியில் எந்த அளவிற்கு நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்.நமக்கு ஒரு கடமை இருக்கு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பரப்பாளர்கள் மிஷினரி மற்றும் நிர்வாகங்கள் கல்விக்கு செய்த பணி மகத்தான பணி அதற்கும் நம் பாராட்டையும் நன்றியையும் கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

நான் அமைச்சரான பிறகு பல மாவட்டங்களில் பல கல்லூரிகளில் இந்த மாதிரி சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறேன். கல்லூரி பள்ளி சில கல்லூரிகளே கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் வரைக்கும் முன்னாள் உருவாக்கப்பட்ட கல்லூரிகள் இன்றைக்கு இருக்கின்ற தமிழ்நாட்டில் இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கல்வியில் முதலிடம் பெற்ற மாவட்டம் சென்னை அல்ல மதுரை அல்ல கோவை அல்ல கன்னியாகுமரி ஏன் கன்னியாகுமரி என்றால் கிறிஸ்தவ நிறுவனங்கள் கூடுதலாக பல நூற்றாண்டுகளாக பல 10 ஆண்டுகளாக இருக்கின்றன.

ஒரு நல்ல சமுதாயம் அனைவருக்கும் வாய்ப்பு முதலமைச்சர் கூறுவது போல் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு கல்வி நிறுவனம் சிறப்பாக 60 ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கும் குழுவிற்கு பள்ளிக்கும் நான் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் . இன்றைக்கு எத்தனையோ வகையில் நம்ம முன்னேறி இருந்தாலும் பல வகையில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல துறைகளில் பல மாற்றங்களை முதலமைச்சர் எங்களிடம் கடமையாக கொடுத்து அவரே சிலவற்றை நேரடியாக செய்தும் நாங்கள் எல்லாம் சில பணிகளை ஆளுக்கு ஆள் செய்து வருகிறோம்.

கல்வி துறையை சார்ந்த முயற்சிகள் ஆரம்பப்பள்ளி அரசாங்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதேபோல் எல்லா பள்ளிகளின் உட்கட்டமைப்பை சிறப்பிக்க நமது ஊர் நமது பள்ளி திட்டம் எத்தனையோ வகைகள் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நான் முதல்வன் திட்டம் இன்னொரு அடையாளம் மற்றும் முழு உதாரணம்.

அடுத்த தலைமுறை சிறப்பாக திறனோடு உற்பத்தி செய்யும் வகையில் உயர்த்தி உலக அளவிலான பொருளாதாரத்தில் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாக்குவது எங்கள் அரசாங்கத்துடைய கடமையாகும் அதற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இன்னும் நான் கூறப்போனால் இன்றைக்கு உலக அளவில் நமக்கு மிகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருக்கிறது தகவல் தொழில்நுட்பத்துறை .

அதனால் அந்த துறையில் நான் அமைச்சராக இருப்பது எனக்கு கிடைத்த பெரிய வரமாக நான் கருதுகிறேன். பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் நான் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறேன் என் கணிப்பில் மாதத்துக்கு 10,000 வேலை வாய்ப்புகள் இந்த துறையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் .அதை 20 லிருந்து முப்பது ஆயிரம் இலக்கு அடைய அதற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் சென்னையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தி உலக அளவில் புதுப்புது நிறுவனங்களை உருவாக்கியவர்களை அழைத்து மாணவர்களுக்கு இலவசமாக அங்கே போவதற்கு டிக்கெட் அளித்து நம் மாநில மாணவர்களும் தொழில்நுட்ப புது நிறுவனங்கள் துவக்க கூ டியவர்கள் ஸ்டார்ட் அப் அவர்கள் இந்த பெரிய உலக அளவில் இருக்கிற மிக சிறப்பான முன்னேறிய நபர்களையும் கற்றுக் கொள்வதற்கு சிறப்புமிக்க வாய்ப்பை இதுவரைக்கும் செய்யாத முயற்சியை நாம் செய்ய இருக்கிறோம்..

தேனி மாவட்டத்தில் இந்த மாதிரி வேலை உயர்த்துவதற்கு பணி செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். உறுதியாக வரும் ஆண்டில் ஏதோ ஒரு வகையில் இங்கே ஒரு சிறப்பான முயற்சி எடுத்து இங்கே பணி வாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடங்க முயற்சி எடுக்கப்படும்.

உட் கட்டமைப்பு சமுதாய கட்டமைப்பு நம் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக தான் இருக்கிறது இருந்தபோதிலும் தினப்படி செயலிலும் தற்காலிகம் இருக்கிற சூழலும் சில அளவுகோலிலும் இன்னும் பல வகைகள் நம் நிர்வாகத்தை அரசாங்க செயல்பாட்டை சிறப்பிக்க தேவைப்படுகிற சூழ்நிலை இருக்கிறது அதுதான் உண்மை அதை உணர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையிலும் புதுப்புது திட்டங்களையும் புது புது முயற்சி களை நம் முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான் நிதியமைச்சர் ஆகவும் மனித வள மேலாண்மை துறை அமைச்சராகவும் இருந்த போது எடுத்த பல முயற்சிகளை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொழில்நுட்ப துறையில் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.இதனை எதிர் வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் தெரிவிப்போம். இதை தொடர்ந்து செய்வோம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த 16 வது சட்டமன்றத்திற்கு காலம் இருக்கிறது.

அதில் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பணி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் அதெல்லாம் நல்ல முறையில் நடக்கும் . நாங்கள் இறுதியாக 60 ஆண்டுகளில் பல ஆயிரம் மாணவர்களை பல வகைகள் அவர்கள் குடும்பத்திற்கு முன்னேறும் பாதையை காண்பித்து ராயப்பன்பட்டி தேனி மாவட்டம் தமிழ்நாட்டுக்கு பலனளிக்கும் வகையில் கல்வி அளித்து இந்த சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி உடைய அனைத்து பொருளாளர் நிர்வாகிகள் தாளாளர் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் முன்னாள் இந்த பொறுப்பில் இருந்தவர்கள் 60 ஆண்டுகளாக அவர்கள் எல்லோருக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே கூடி இருக்கும் மாணவர்களுக்கு உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் நீங்கள் எல்லாம் சிறந்த வகையில் கல்வி பெற்று உலகளவில் பொருளாதாரத்தில் புகழும் பெற முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் எனினும் இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு அருகே நாங்கள் விவசாயம் செய்யும் ஊரிலேயே என்னை அழைத்ததற்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் என பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!