Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரசு -34

(கி.பி 661-750)

கவர்னர் அஸ்ரஸ் ஒரு பைத்திய காரத்தனமான உத்தரவை பிறப்பித்தார்.

முஸ்லீம்களாக மாறிய மக்கள் கத்னா செய்திருக்கிறார்களா தொழுகிறார்களா, குர்ஆன் ஓதுகிறார்களா என்று சோதித்து சரியாக இவைகளை செய்யவில்லை எனில் அவர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க உத்தரவிட்டார்.

அதிகாரிகளின் அராஜகங்களால், சோதனை அழுத்தங்களால், நிறைய மக்கள் மீண்டும் காஃபிர்களாக மாறினர்.

உமைய்யா அரச குடும்பத்தினர் மிகுந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை.

தினார்கள் பறித்தல், சொத்துக்களை அழுத்தம் கொடுத்து பறித்தல், அதிகாரிகளின் வெறியாட்டங்கள், உமைய்யாக்களின் பரம்பரை வெறி, மக்கள் உரிமைகள் பறிப்பு ,என பேரரசு மக்களின் கோபத்தை சம்பாதித்தது.

மன்னர் ஹிஸாம் நல்லவராக இருந்தும், நிர்வாகத்திறன் இல்லாமல் இவர்களை கட்டுப்படுத்த தவறியதால், மக்களிடையே வெறுப்புணர்வு பரவத்தொடங்கியது.

அது மக்கள் புரட்சியாக மாறத் துவங்கியது. ஹுசைன் (ரலி) அவர்களின் பேரர் ஜைத் அவர்களின் தலைமையில் மக்கள் அணிசேரத் தொடங்கினர்.

ஜைதை ஒழித்து மக்கள் அணி சேர்வதைத் தடுக்க, கூபா கவர்னர் யூசுப் இப்னு உமர் அவர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.

கூபா கவர்னர் யூசுப் இப்னு உமர் அவர்கள் பஜ்ரு தொழுதுவிட்டு லுஹா தொழுகை வரை பள்ளியிலேயே இருப்பார்.லுஹா தொழுவிட்டே நகருவார். திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருப்பார்.

ஆனால் மனிதமனம் விசித்திரமானது. இவர் இரக்கமே இல்லாத கொடுங்கோலராக இருந்தார்.

யூசுப் இப்னு உமர் அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் பேரர் ஜைது அவர்களை கொடூரமாக கொன்றார்.

தலையை தனியாக வெட்டி தலையை மட்டும் டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்.ஜைது அவர்களின் உடலை பல நாட்கள் கூபாவில் தொங்கவிட்டு இருந்தார்.

இதனால் உமைய்யா ஆட்சியாளர்கள் மீதான கோபம் மக்களிடையே அதிகரித்தது. அலி(ரலி) வழிவந்த ஜைது குடும்பத்தினர் மீதான அனுதாபம் அதிகரித்தது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கட்டுப்பாடற்ற மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதித்த ஹிஸாம் இப்னு அப்துல் மலீக் அவர்கள் மரணமடைய ஆட்சி முடிவுக்கு வந்தது.

அடுத்து உமைய்யா ஆட்சியாளராக வலீத் இப்னு யஜீது என்ற இரண்டாம் வலீது பதவியேற்றார்.

இவர் மது,மாது என்று மிகவும் நடத்தை கெட்டவராக இருந்தார். மக்கள் இவரை வெளிப்படையாகவே பாவி என விமர்சிக்கும் அளவிற்கு இவரின் செயல்பாடுகள் அமைந்து இருந்தன.

எதிரிகளை தேடிப்பிடித்து பழிவாங்கினார். ஜைது அவர்களின் மகன் யஹ்யாவை படுகொலை செய்து உடலை ஈட்டியில் குத்தி ஏழுவருடங்கள் தொங்க விட்டு இருந்தார்.

உடல் அழுகி நாற்றமெடுத்து எலும்புகூடாகி உதிர்ந்தாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அலி(ரலி) குடும்பத்தின் அவர்களின் பெரிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) அவர்களின் நாலாவது பேரர் முகம்மது இப்னு அலி தலைமையில் மக்கள் ஒன்று கூடினர்.

இவரின் அதிரடி நடவடிக்கைகள் உமைய்யா பேரரசின் அஸ்திவாரத்தை அசைத்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!