Home செய்திகள் குடிதண்ணீர் குழாய் உடைந்து வீணாகும் அவலம்

குடிதண்ணீர் குழாய் உடைந்து வீணாகும் அவலம்

by mohan

தேனி மாவட்டம்… பெரியகுளத்தில் தினம் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அரசு அலுவலர்களும் கடந்து செல்லக்கூடிய பகுதியாக இருப்பது வள்ளுவர் சிலை .இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள் மட்டும் அல்லாது. நகராட்சியினுடைய வணிகவளாகம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நூலகம் . நகராட்சி அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம்.  மதுபானக்கடை என எல்லாம் இருக்கும் இடத்தின் அருகில் மூன்று தினங்களாக குடிதண்ணீர் குழாய் உடைந்து வீணாகி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் ஓடுகிறது இதையெல்லாம் கண்டும் காணாமல் போகின்ற அரசு ஊழியர்கள் இது சம்பந்தமாக  தகவல் தராமல் இருப்பது தான் வேதனையான விஷயமாகவே கருதப்படுகிறது…

கோடை காலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் மக்களுடைய தேவைக்காக கொண்டு செல்லக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீச்சி அடித்து வீணாவதைக் கண்டு ஏழை எளிய மக்கள் இந்த தண்ணீர் எங்கள் பகுதிக்கு கிடைக்காதா என்று ஏக்கத்தோடு கூறும் கிராமவாசிகள்இருந்தாலும். ஏனோ சம்பந்தப்பட்ட அதிகாரியின் காதில் விழாமல் இருப்பது வேடிக்கையாகவே உள்ளது ..அதேபோல் வீணாகும் தண்ணீரை வீணாக்க விரும்பாமல் அங்கு இருந்த பாதசாரி ஒருவர் தன்னுடைய துணிகளையும் துவைத்து தானும் குளிப்பது வேடிக்கையான விஷயமாக இருந்தாலும் இதையெல்லாம் கண்டு வெட்கப்படக்கூடிய அதிகாரிகள் தன்னுடைய அலட்சிய போக்கை கைவிட்டு உடனடியாக உடைப்பு ஏற்பட்டு இருக்கக்கூடிய அந்த குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் சிக்கனத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.. நடக்குமா ? என்பதை நாமும் எதிர்பார்க்கலாம்.

இவண். சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!