
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட குமணன்தொழு அருகே பரமக்குடி கிராமத்தில் ஏழைக் கூலித் தொழிலாளி சந்திரன் மகன் ராஜீவ் காந்தி 32 இவர் கூலி வேலை செய்து கொண்டு பசு மாடு வளர்த்து வருகிறார்.நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் இலவம் மரம் சாய்ந்தில் பசுமாடு அதே இடத்தில் துடிதுடித்து பலியானது. இது சம்பந்தமாக கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை வருவாய்த்துறை யினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தில் தேக்கு மரம் சாய்ந்து பசுமாடு பலியானது.
இதனைத்தடர்ந்து கடமலைக்குண்டு கிராமத்தில் முனியாண்டி நாயக்கர் தெருவில் மின்கம்பம் கீழே சாய்ந்தது. பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இரவு விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு அருகே சிதம்பரம் விளக்கு கிராமத்தில் தமிழ்தாய் கருணை இல்லத்தில் முதியவர் மீது கதவுகள் தகரம் சூறாவளி காற்றால் விழுந்ததில் இருவர் பலத்த காயமடைந்தனர். இது சம்பந்தமாக கடமலை மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அரண்மனைபுதூர் மழை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் முருங்கைமரம், இலவமரம், தென்னை, உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றில் பலத்த சேதம் அடைந்தது இதேபோல் கடமலை மயிலை ஒன்றியத்தில் ஒவ்வொரு விவசாய பயிர்களும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.