பொன்னகரம் பகுதியில் தொடர்ச்சியாக 5 வீடுகளில் கொள்ளை ..

பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியில் 5 வீடுகளில் திருட்டு. பென்னாகரம் டிச 20.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு குருசாமி மகன் குமார், சின்னுகவுண்டர் மகன் சந்திரன், ராஜேந்திரன் மனைவி பொண்ணுத்தாயி, சின்னு மகன் கோவிந்தன் ,வெள்ளையன் மனைவி ஜெயா ஆகியோர் வீட்டில் இருந்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சுமார் 5லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையெடுத்து பெரும்பாலை எஸ் ஐ.மாரிக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடிசென்ற மர்ம நபர்கள் யார் என்று விசாரணை செய்தனர்.மேலும் கிரைம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஒரே ஊரில் 5வீடுகளில் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி செய்தியாளர் ஸ்ரீதர்