கீழக்கரை முக்கு ரோடு பகுதி கடையில் திருட்டு ..

கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு ECR மெயின் ரோடு பகுதியில் ரெத்தினம் மளிகை ஸ்டோர் என்ற கடை பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.

இத்திருட்டு சம்பவத்தில் கடையில் இருந்த ₹.3,000/-, அரிசி மூடைகள், எண்ணெய் பாக்கெட் பெட்டிகள் என  ₹20,000/- மதிப்பிலான  பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கடையின் உரிமையாளர் ஜெகன் புகார் அளித்ததுடன் பேரில், கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கடை கீழக்கரை காவல் நிலையம் அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மக்கள் டீம்.