கீழக்கரை தாஸீம் பீவி மகளிர் கல்லூரி மாணவிகள் சுகாதார துறையினருடன் இணைந்து ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு ஊர்வலம்

கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினருடன் இணைந்து தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல திட்ட மாணவிகள் இன்று 09.03.17 விழிப்புணர்வு ஊர்வலத்தினை துவங்கியுள்ளனர். கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, அரசு மருத்துவர் ராசிக்தீன், சுகாதார துறை மலேரியா கிளினிக் அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில் இந்த ஊர்வலம் சிறப்பாக நடை பெற்று வருகிறது.

கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் மாணவிகள் பங்கேற்று ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுக்களிடம் இந்த தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கும் விதமாகவும் விழிப்புணர்வு கோஷங்களை முழக்கமிட்டு, விழிப்புணர்வு வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சக்தி, ஹாஜா, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#Paid Promotion