கீழக்கரை முஸ்லீம் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக ‘திடீர்’ ஆட்டோ ஸ்டாண்ட் – சமூக ஆர்வலர்கள் காவல் துறையில் புகார்

கீழக்கரை முஸ்லீம் பஜார் லெப்பை டீக் கடை அருகாமையில் தற்போது திடீரென பேங்க் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம்  என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, இந்த பகுதியில் 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும் இந்த வங்கி சாலையில் தற்போது ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டிருப்பது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது, பத்திரிக்கையாளர் நிஸ்பர், மக்கள் டீம் காதர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர், கீழக்கரை மக்கள் களத்தின் துணை தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் உடனடியாக இந்த பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இஸ்பெக்டர் புவனேஸ்வரி உத்தரவிட்டார்.