கீழக்கரை முஹைதீனியா பள்ளி கல்விக்குழு நிர்வாகிகள் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழங்கிய ‘தன்னம்பிக்கை டானிக்’

தமிழகம் முழுவதும் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மேட்ரிகுலேஷன் பள்ளியில் அந்த பள்ளியில் இருந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக முஹைதீனியா கல்விக் குழு நிர்வாகிகள் சிறப்பான சொற்பொழிவினை நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம், கல்விக்குழு பொருளாளர். சேகு பசீர் அகமது, பள்ளியின் முதல்வர் N.M. சேகு சஃபான் பாதுஷா ஆகியோர் தாங்கள் சிறுவயதில் கடந்து வந்த பள்ளி கால நிகழ்வுகள் குறித்தும், தேர்வுகளை எதிர்கொள்வது சம்பந்தமான அச்சங்களை போக்குவது பற்றியும்,

சரித்திரத்தில் வெற்றி வாகை சூடிய கல்வியாளர்கள், மேதைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து, தேர்வுகளில் தோல்வி கண்டால், தற்கொலை எண்ணங்களில் சிக்கி துவண்டு விடாமல் எதிர் நீச்சல் அடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது சம்பந்தமாகவும் சிறப்பான தன்னம்பிக்கை சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்ததோடு, தேர்வுகளில் வெற்றிக்கனியை பறிக்க உறுதி பூண்டனர்.