Home செய்திகள் தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

by mohan

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 0 முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் பகுதி, முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வழங்கும் பகுதி, மனநல மருத்துவ பகுதி, உடல் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது. இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், ஆதார் அட்டை வழங்குதல், காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூளை முடக்கவாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, பராமரிப்பு உதவித் தொகை, பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை அட்டை,அடையாள அட்டை பெறுதல், புதிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் எளிதில் பங்கேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய பகுதிகளிலும் முகாம் நடத்தப்படுகிறது. 23.07.2019 அன்று சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு கொம்மடிக் கோட்டை,சந்தோஸ்நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,24.07.2019 அன்று புதூர் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,25.07.2019 அன்று கோவில்பட்டி ஒன்றியத்திற்கு V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,26.07.2019 அன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்கு மாவடிபண்ணை வட்டார வளமையம், அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,29.07.2019 அன்று கருங்குளம் ஒன்றியத்திற்கு செய்துங்கநல்லூர் RC நடுநிலைப் பள்ளியிலும்,31.07.2019 அன்று உடன்குடி ஒன்றியத்திற்கு கிறிஸ்தியா நகரம் தூ.நா.அ.தி.க. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,01.08.2019 அன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,02.08.2019 அன்று விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,06.08.2019 அன்று திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு அருள்மிகு திருச்செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,07.08.2019 அன்று கயத்தார் ஒன்றியத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,08.08.2019 அன்று திருவைகுண்டம் ஒன்றியத்திற்கு KGS தொடக்கப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனுடையோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 6,குடும்ப அட்டை நகல், வருமான சான்றிதழ் நகல் (இருப்பின்), தேசிய அடையாள அட்டை நகல் (இருப்பின்), ஆதார் அடையாள அட்டை நகல் (இருப்பின்) மற்றும் பிற மருத்துவ சான்றுகள் (இருப்பின்) கொண்டு வரவேண்டும்.எனவே 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த ஒன்றியங்களில் நடை பெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!